Instagram Lite with 8 regional languages in India
பேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் தங்கள் பயனர் தளத்தை விரிவுபடுத்துவதற்காக இன்ஸ்டாகிராம் லைட் அப்ளிகேஷனை வெளியிட்டது. இன்ஸ்டாகிராம் லைட் சேவையானது அதிக பயனர்களை சென்றடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் அமைப்பானது 2 MB க்கும் குறைவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மிகவும் குறைந்த ஆற்றல் கொண்ட ஸ்மார்ட் போன்களிலும் கூட வேகமாகவும் மென்மையாகவும் இயங்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 2018ஆம் ஆண்டு மெக்சிகோவில் உருவாக்கப்பட்ட செயலி ஆகும் பின்னர் அதை பேஸ்புக் நிறுவனம் அந்த செயலியை நிறுத்தியது.
இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மூலம் ஆண்ட்ராய்டு பயனாளர்கள் இந்தியாவில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். விரைவில் இது உலகெங்கிலும் இருக்கும் அனைத்து பயனர்களுக்கும் வெளியிடப்படும். இந்த லைட் செயலியில் தற்போது இந்தியாவில் உள்ள பிராந்திய மொழிகளையும் இணைத்துள்ளனர். தமிழ், பஞ்சாபி, மராத்தி, இந்தி, மலையாளம், கன்னடம், குஜராத்தி, பங்களா முதலியன உள்ளடங்கும்.
இந்த இன்ஸ்டாகிராம் லைட் செயலி குறைந்த அளவு ரோம் மற்றும் சேமிப்பு இடம் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு மிகவும் சிறந்ததாக இருக்கும். இருப்பினும் இதில் ரியல்ஸ் ஷாப்பிங் மற்றும் ஐஜி டிவி போன்ற சில முக்கிய அம்சங்கள் தற்போது இதில் இடம்பெறவில்லை. இவை அனைத்தும் இடம் பெறும் பட்சத்தில் இன்ஸ்டாகிராம் லைட் முழு பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருந்திருக்கக்கூடும்.
பேஸ்புக் நிறுவனம் இதுபோன்ற குறைந்த சக்தி கொண்ட லைட் செயலிகளை உருவாக்கி வெளியிடுவது இது முதல்முறை அல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு, பேஸ்புக் லைட் செயலியை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுகுறித்து உதவி இயக்குனர் விஷால் கூறுகையில், " இந்தியா எங்களின் புதுமை காண சோதனை களமாக இருந்து வருகிறது. இன்ஸ்டாகிராம் லைட்டிங் உலகளாவிய வெளியீட்டிற்கு முன்பே நாங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை இந்திய பயனர்களிடம் இருந்து பெறுவோம் என்று நாங்கள் நம்புகிறோம்.
இந்த செயலி வெளிவந்த பத்து தினங்களிலேயே 3.5+ ரேட்டிங் மற்றும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்களை ப்ளே ஸ்டோரில் ஈர்த்துள்ளது. இதன் வடிவமைப்பு பயனர்களுக்கு மிகவும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்