பொங்கல் வாழ்த்துக்கள் | Pongal wishes in Tamil | கவிதைகள்
தமிழர் திருநாளான தைப்பொங்கல் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் கொண்டாடுவது வழக்கம். இந்த அற்புதமான பொங்கல் திருநாளில் உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு மகிழ்ச்சியை வாழ்த்துக்கள் வாயிலாக தெரிவிக்க இங்கே பல பொங்கல் வாழ்த்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புமிக்க நன்னாளில் அனைவரும் தங்களிடமுள்ள மகிழ்ச்சியை வெளிப்படுத்த பொங்கல் வாழ்த்து கவிதைகள் (Pongal wishes in Tamil) உங்களுக்காக.
பொங்கல் வாழ்த்து கவிதைகள் (Pongal wishes in Tamil)
சூரியன் தன் ஒளி கற்றை
இந்த பூமியின் மீது செலுத்துவதை போன்று
உங்கள் வாழ்வில் எண்ணற்ற
மகிழ்ச்சி பொங்கட்டும்,
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
அமைதி மேலோங்க எப்பொழுதும் எல்லாமும் பெற்று வாழ
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
அறிவு, மகிழ்ச்சி, வெற்றி, புனிதம்
இவை அனைத்தையும் இந்த தைத்திருநாள்
உங்கள் வாழ்வில் கொண்டு வரட்டும்,
இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.
வியர்வை மண்ணுக்கு உரமாக,
வெயில் மழை பாராமல் பாடுபட்டு,
உழைத்த நெல்மணிகளை புதுப்பானையில் பொங்கலிட்டு,
பொங்கலோ பொங்கல் கொண்டாடுவோம்.
தைப் பொங்கல் திருநாளும்
தமிழனின் பெரும் நாளாம்
மகிழ்ச்சி எங்கும் பொங்குது பார்!
புதுப்பானையில்…
மா இலையின் தோரணமும்,
மாட்டு கொம்பில் பூ வர்ணமும்,
மண்ணில் எங்கும் மின்னுது பார்!
திரை ஓவியமாய்…
மயிலிறகு ஆடைகளும்,
வண்ணமிகு கனவுகளும்,
வட்டமிட்டு வருகுது பார்!
காணும் பொங்கலை காண…
இமை திறப்பது இருள் அகல,
ஒளி பிறப்பது மருள் அகல,
மேகம் திறப்பது மழை பெறுக,
தை பிறப்பது நல்வழி பிறக்க.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
Pongal wishes in Tamil
அன்பும் ஆனந்தமும் பொங்கிட,
அறமும் பலமும் தழைத்திட,
இல்லமும் உள்ளமும் பொங்க,
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
முகத்தில் சிரிப்பு பொங்க,
வாழ்வில் மகிழ்ச்சி பொங்க,
பொங்கட்டும் தை பொங்கல்.
விடிகின்ற விடியல் யாவும்
கரும்பாக இனிக்கட்டும்,
இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.
Pongal wish
சூரியனின் தெய்வீக ஆசீர்வாதம்
உங்கள் வீட்டிற்கு வரட்டும்,
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
எங்களுக்கு அரவணைப்பை அளிப்பதற்காக தன்னையே எரித்துக் கொண்ட சூரியனுக்கு நன்றி கூறுகிறோம்.
எங்கள் உயிருக்காக தங்களையே தியாகம் செய்த தாவரங்களுக்கு நன்றி.
ஆரோக்கிய வாழ்க்கையை வாழ உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.
வளமிக்க எதிர்காலம் பொங்க இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
இந்த அன்பான அறுவடைத் திருநாள்
உங்களுக்கு எப்போதும் சிறந்த உணவுகளையும் மற்றும் சிறந்த வாழ்க்கையையும் உறுதி செய்யட்டும்.
நன்மை பயக்கும் அதிர்ஷ்டம்,
உங்கள் வீட்டில் நுழைந்து,
வெற்றி உங்கள் கால்களை தொட்டு,
பொங்கல் எனும் புனித நாளில்
மகிழ்ச்சி பொங்கட்டும்.
இந்த அறுவடைத் திருவிழா,
உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து
அச்சங்களையும் தோல்விகளையும் அறுவடையாகி,
உங்களுக்கு வெற்றிகளைக் கூட்டி,
ஆரோக்கியமான எண்ணங்களால் மகிழ்ச்சி பொங்கட்டும்.
இனிய பொங்கல்!
பால் மற்றும் கரும்பில் இனிப்பு நிரம்பி வழிவது போல
மகிழ்ச்சியும் ஒற்றுமையும் வீட்டில் நிரம்பி வழியட்டும்
இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்!
பொங்கல்
பொங்கல் திருவிழா என்பது நான்கு நாட்கள் கொண்டாடப்படும் ஒரு திருவிழாவாகும்.
இந்த திருவிழாவின் போது புதிதாக அறுவடை செய்யப்பட்ட கரும்பு, மஞ்சள், அரிசி
போன்ற பொருட்களை சூரியனுக்கு படையலிட்டு கொண்டாடி மகிழ்வர். குறிப்பாக
தென்னிந்தியாவில் தமிழகத்தில் அதிகம் கொண்டாடப்படும் திருவிழாவாகும். இந்தத்
தமிழர் திருநாள் தைத்திருநாள் எனவும் அழைப்பார். இது இந்தியாவில் வெவ்வேறு
பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
இந்த நல்ல நாளில் உங்களால் இயன்ற அளவு உதவிகளை பிறருக்கு செய்யுங்கள்.
உங்களை சுற்றி உள்ளவர்களை மகிழ்வுடன் பார்த்துக் கொள்ளுங்கள். இதுபோல் ஒரு
நல்ல நாளில் நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களுக்கு முதல் முயற்சி எடுங்கள்.
அதுமட்டுமின்றி இந்த நல்ல நாளில் நமக்கு உணவளித்தால் விவசாயிகள் மற்றும்
உற்பத்தியாளர்களை நினைவில் கொள்ளுங்கள்.
இந்த பொங்கல் திருநாளில் அனைவரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியத்துடனும்
வாழ இந்த வலை பக்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம். மேலும் இங்கே
இடம்பெற்றுள்ள பொங்கல் வாழ்த்து கவிதைகள், பொங்கல் வாழ்த்துக்கள்
அனைத்தையும் உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து மகிழ்வுடன் இருக்க
வாழ்த்துகிறோம். உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளையும் மற்றும் வாழ்த்து
செய்திகளையும் கீழே கருத்துக்களாக பதிவு செய்யலாம்.
Tag: Pongal wishes in Tamil, Pongal wishes, பொங்கல் வாழ்த்துக்கள், பொங்கல் வாழ்த்து.
0 கருத்துகள்