Ticker

6/recent/ticker-posts

யூடியூப் சேனல் எவ்வாறு தொடங்குவது? - Start a YouTube channel

யூடியூப் சேனல் எவ்வாறு தொடங்குவது?- Start a YouTube channel

யூடியூப் சேனல் ஆரம்பிப்பது எப்படி? யூடியூப் சேனல் மூலம் சம்பாதிப்பது எப்படி? இது போன்ற கேள்விகளுக்கு விடை தெரிய விரும்பினால் இந்த கட்டுரையை முழுவதுமாக படியுங்கள்.

மக்கள் விரும்பும் வகையான வீடியோக்கள் உங்களால் உருவாக்க முடியுமா? அல்லது மக்களுக்கு தேவையான வீடியோக்கள் ஏதேனும் உங்களால் உருவாக்க முடியும் என்றால் நீங்கள் யூடியூப் சேனல் ஆரம்பிக்க தகுதியானவர்.


யூடியூப் சேனல் எவ்வாறு தொடங்குவது?


யூடியூப் சேனல் தொடங்குவதற்கு உங்களுக்கு ஒரு ஜிமெயில் அக்கவுண்ட் தேவை.  ஜிமெயில் அக்கவுண்ட் உருவாக்கிய பிறகு நீங்கள் கூகுளில் சென்று யூடியூப் என்று தேடவும். கீழேயுள்ள போட்டோவில் கொடுக்கப்பட்டது போன்று நீங்கள் காணலாம். 

கூகுளில் சென்று யூடியூப் என்று தேடவும்

அதன்பிறகு, யூடியூப் ஸ்டுடியோ (YouTube Studio) என்று தோன்றுவதை கிளிக் செய்யவும். நீங்கள் யூட்யூப் ஸ்டுடியோவை கிளிக் செய்த பிறகு கீழே உள்ள படத்தில் தோன்றுவது போல உங்களுக்கும் தோன்றும். 

google sign in picture

இதில் உங்கள் ஜிமெயில் ஐடியை டைப் செய்யவும். அதன் பிறகு நீல வண்ணத்தில் கொடுக்கப்பட்டுள்ள நெக்ஸ்ட் எனும் பட்டனை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் உங்கள் உங்களின் ஜிமெயில் பாஸ்வேர்டை டைப் செய்யவும். இதை முடித்தவுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் காண்பிப்பது போன்று உங்களுக்குக் காண்பிக்கப்படும்.

யூடியூப் சேனல் எவ்வாறு தொடங்குவது? - Start a YouTube channel

இந்த பக்கத்தில் நீங்கள் உங்களது முதல் பெயர் மற்றும் கடைசி பெயரை குறிப்பிடும் படி கூறும். நீங்கள் அவ்வாறு குறிப்பிட்டதுடன் கிரியேட் சேனல்(Create channel) என்று கொடுக்கப்பட்டுள்ள நீல வண்ணம் உள்ள பட்டனை கிளிக் செய்யவும். இதன் மூலம் நீங்களும் ஒரு யூடியூப் சேனலை தொடங்கி விட்டீர்கள்.


யூடியூப் சேனல் தமிழில் ஆரம்பிக்கலாமா?


இந்தக் கேள்விக்கான சிறந்த பதில், ஆம். இன்றைய காலகட்டத்தில் தமிழக இளைஞர்களிடம் யூடியூப் பார்ப்பது அதிகரித்துள்ளது. என்னால் நீங்கள் யூடியூப் சேனல் தமிழில் ஆரம்பிக்கும் பட்சத்தில் உங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது.


யூடியூப் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?


யூடியுப் மூலம் உங்களால் பல வழிகளில் பணம் சம்பாதிக்க முடியும். அதில் மிகவும் பிரபலமான வழி என்னவென்றால் விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிப்பது ஆகும். நீங்களும் விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்க விரும்பினால் அதற்கு உங்களுக்கு ஒரு ஆட்சென்ஸ் அக்கௌன்ட் தேவைப்படும். ஆட்சென்ஸ் அக்கவுண்ட் உருவாக்குவதற்கு யூடியூப் சில கட்டுப்பாட்டு விதிமுறைகளை விதித்து உள்ளது. நீங்கள் ஒரு ஆட்சென்ஸ் அக்கௌன்ட் உருவாக்க முதலில் நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் நல்ல வீடியோக்களை பதிவிடவும். அந்த வீடியோக்கள் மூலம் நீங்கள் 1000 சப்ஸ்கிரிபர்ஸ் மற்றும் நான்காயிரம் வாட்ச் ஹவர்ஸ் கொண்டு வரவும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்